logo
கால் நூற்றாண்டு பாதை  பிரச்சினைக்கு தீர்வு:கோட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு

கால் நூற்றாண்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு:கோட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு

29/Nov/2022 05:57:13

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கால் நூற்றாண்டாக இருந்த வந்த பாதை பிரச்சினைக்கு தீர்வு கண்ட புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
  கறம்பக்குடி வட்டம் அம்புக்கோவில் ஊராட்சியில் கண்டியன்பட்டி ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இங்கிருந்து கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆண்டான் தெரு வரை சுமார் 2.5 கிலோ மீட்டருக்கு பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லவும், மயானத்துக்கு செல்லவும் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர். பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அவ்வப்போது போராட்டங்களை நடத்தியும்கூட தீர்வில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனிடம் அப்பகுயினர் அண்மையில் கோரிக்கை மனுவை அளித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், கோட்டாடஅசியர் முருகேசன் முன்னிலையில் போலீஸார் பாதுகாப்புடன்  பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 2.5 கிலோ மீட்டருக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கால் நூற்றாண்டாக நீடித்து வந்த பாதை பிரச்சினைக்கு தீர்வு கண்ட புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.


Top