logo
சாதனை மாணவிக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு

சாதனை மாணவிக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு

02/Jul/2022 08:46:14

புதுக்கோட்டை: தலைமுடியால் வேனை இழுத்து உலக சாதைனை படைத்த அரசுப்பள்ளி மாணவி, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி வெ.சம்யுக்தா, (வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன்) சாதனைக்காக 1410 கிலோ எடையுள்ள வேனை தனது தலைமுடியால் இழுத்து சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம் மாணவி சம்யுக்தா வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் புத்தகத்தில் பெயரை பதித்துள்ளார்.

மேலும், தனது 8 வயதில், தலைமுடியால் காரை இழுத்து இந்தியன் ரெக்கார்டு மற்றும் ஆசியன் ரெக்கார்டு என இரு சாதனைகளை படைத்துள்ளார்.

 இந்நிலையில், மாணவி சம்யுக்தா, பயிற்சியாளர் இளையராஜா, மாணவியின் பெர்றோர்.அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அரசுப்பள்ளியில் பயின்று சாதனை படைத்த மாணவியின் சான்றிதழ்களை பார்வையிட்டு, மேலும் பல சாதனை படைக்க வேண்டுமென மாணவியிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Top