logo
பச்சலூர் அரசு பள்ளியை பார்வையிட்ட மற்றொரு அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்

பச்சலூர் அரசு பள்ளியை பார்வையிட்ட மற்றொரு அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்

13/May/2022 08:54:22

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே முன்மாதிரி அரசுப்பள்ளியாக திகழும் பச்சலூர் அரசுப்பள்ளியை மற்றொரு அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பச்சலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ஏசி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் முன்மாதிரி பள்ளியாக திகழ்கிறது.

இந்தப் பள்ளியை  வடகாடு ஊராட்சி, புள்ளாட்சி குடியிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் சித்ரா மற்றும் மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பார்வையிட்டனர்.

 அனைவரும் ஒவ்வொரு வகுப்பறையாக பார்த்ததோடுமதிய உணவை  மாணவர்கள் ஒழுக்கமாக சாப்பிட்டது உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர்.

 இந்தப் பள்ளியை போன்று தங்களது பள்ளியை மேம்படுத்துவதற்கு வழிகாட்ட  வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

அதற்கு வழி காட்டுவதாக அவர் உறுதியளித்ததோடு பள்ளி மேம்பாட்டிற்காக ரூ.35 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

இதுகுறித்து புள்ளாட்சி குடியிருப்பு மக்கள் கூறியது:பள்ளியை  மேம்படுத்துவதற்காக கடந்த வாரம் எங்களது பள்ளியில நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு வருகை தந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ரூ.35 ஆயிரத்தை வழங்கியுள்ளார். பச்சலூர் பள்ளி சார்பில் கொடுத்திருக்கும் தொகை மற்றும் பொதுமக்களிடம் தொகை வசூலித்து தலைமையாசிரியர் ஜோதிமணியின் வழிகாட்டுதல்படி ஓரிரு மாதங்களில் பள்ளியை  மேம்படுத்த உள்ளோம் என்றனர்.

 

Top