logo
மாவட்ட விளையாட்டுத்திடலில் குளம் போல தேங்கி நிற்கும்  மழை நீரால் விளையாட்டு வீரர்கள் அவதி

மாவட்ட விளையாட்டுத்திடலில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீரால் விளையாட்டு வீரர்கள் அவதி

04/Sep/2021 12:11:30

புதுக்கோட்டை, செப்: கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால்  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு வீரர்களும், நடைப்பயிற்சியாளர்களும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை  அரசு கல்லூரி அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் செயல்படுகிறது . இந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம், ரன்னிங், தடகளம், பாக்ஸிங், பளு தூக்குதல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு மாணவ மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

புதுக்கோட்டைமாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற பல்வேறு வீரர்கள் தேசிய அளவிலும் ஒலிம்பிக் போட்டியிலும் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக சாந்தி, சூர்யா, அனுராதா, உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தமான  மாவட்ட விளையாட்டு மைதானம் தற்போது மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கிநிற்பதால்.  தற்போது மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம்  மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியோறும்  வகையில்  வரத்து வரிகள் அமைப்பதுடன்,  விளையாட்டு மைதானம் அருகில் உள்ள காட்டுப்புதுக்குளத்தையும் தூர்வார வேண்டும் எனவிளையாட்டு வீரர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Top