logo
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்தாகும் மாடுகளுக்கு நோய் தாக்கம்: கால்நடை   மருத்துவர்கள் ஆய்வு

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்தாகும் மாடுகளுக்கு நோய் தாக்கம்: கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

02/Sep/2021 11:21:08

ஈரோடு, செப்: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்தாகும் மாடுகளுக்கு நோய் தாக்கம் மற்றும்  மாடுகளின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்யவும் கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதேபோல், சந்தையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவது  குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கரை மாதங்களாக சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இன்று முதல் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய சந்தையில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பசு 100, எருமை 30, கன்று 20 என மொத்தமே 150 மாடுகளே வரத்தானது. முதல் நாள் என்பதால் நிறைய விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சந்தை குறித்த தகவல் சென்றிருக்காது. 

அடுத்த வாரம் கூடுதலாக மாடுகள் வரத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இன்று நடைபெற்ற சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. சந்தையில் முக கவசம் அணிந்தவர்களையும், தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்ற சான்றிதழை பெற்றே உள்ளே அனுமதிக்கிறோம். இதேபோல் விவசாயிகள் வியாபாரிகள் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து அதன்பிறகே சந்தைக்குள் அனுமதிக்கிறோம் என்றார் அவர்.


Top