logo
 புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு அரும்பொருள் (மர புதைபடிவம்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு அரும்பொருள் (மர புதைபடிவம்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

10/Aug/2021 10:40:04

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் ஆகஸ்ட் - 2021 மாதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர சிறப்பு அரும்பொருள்  (மர புதைபடிவம்)  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாத  அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ) .டி.பக்கிரிசாமி  தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஆகஸ்ட் - 2021 மாதத்தில் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (மர புதைபடிவம்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. காலங்கள் செல்ல செல்ல புவிக்குள் புதையுண்ட மரங்களிலிருந்த கரிமப் பொருட்கள் சிதைவடைந்து புவியின் இயற்பியல் மாற்றங்களால் நாளடைவில் அம்மரத்திலுள்ள கனிமப் பொருட்கள் இறுகி புதைபடிவமாக மாறுகின்றன. 

இந்த அரும்பொருள் புதுக்கோட்டை நகரம் நரிமேடு என்ற இடத்தில் புறப்பரப்பில் கிடைத்தது. இதன் காலம் சுமார் 2 கோடி ஆண்டுகள் இருக்கலாம். அக்காலத்தில் இவ்விடத்தில் பெரிய பெரிய மரங்கள் காணப்பட்டதற்கு இம்மர புதைபடிவம் ஒரு சான்றாகும். இவ்வரிய அரும்பொருளை அனைவரும் தற்போது ஆகஸ்ட் - 2021 வரை புதுகோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம். 

அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. விடுமுறை நாட்கள் ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஆகும் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ) .டி.பக்கிரிசாமி  தெரிவித்துள்ளார்.


Top