05/Oct/2020 10:10:33
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் எனத் தெரிவித்த வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வழிவகுத்தார்.
இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
வளரும் பிள்ளைகளுக்கு..வள்ளலார் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்: நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே. இன்று வையகத்தை வாழ்விக்க வந்த வள்ளலாரின் அவதாரப் பெருநாள்.இந்நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.
அருட்பெருஞ்சோதி.. அருட்பெருஞ்சோதி.. தனிப்பெருங்கருணை.. அருட்பெருஞ்ஜோதி..