logo
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக  மழை: பவானியில் அதிகபட்சமாக 60  மீ. மி மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை: பவானியில் அதிகபட்சமாக 60 மீ. மி மழை பதிவு

09/Aug/2021 12:08:27


ஈரோடு, ஆக:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.  மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

இதனால், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பெரியார் நகர், காளைமாடு சிலை போன்ற பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகர் பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு இருந்தன. இதில் மழைநீர் தேங்கி நின்றது. குண்டும் குழியுமான ரோடுகளில் சேரும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதைப்போல் பவானி, மொடக்குறிச்சி ,கவுந்தபாடி, அம்மாபேட்டை ,குண்டேரிபள்ளம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பவானியில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. காலை முதல் மாலை வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லிமீட்டர் வருமாறு:-

பவானி - 60, ஈரோடு - 47, மொடக்குறிச்சி - 32, பெருந்துறை - 21, கவுந்தப்பாடி - 11.2, அம்மாபேட்டை - 6.2, குண்டேரிபள்ளம் - 5.6

Top