logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட கையிலைப் பொருட்களை விற்ற 621 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட கையிலைப் பொருட்களை விற்ற 621 பேர் கைது

09/Aug/2021 12:02:45

ஈரோடு, ஆக:ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட கையிலைப் பொருட்களை விற்ற 621 பேர் கைது செய்யப்பட்டனர்.ரூ.1.60 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி  சசிமோகன் தெரிவித்திருந்தார். இதன்படி, ,கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஈரோடு மாநகரில் டவுன் டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், குடோன்கள் ஆகியவற்றில்  தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

இதைப்போல் சத்யமங்கலம், பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை இரண்டு டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 562 வழக்குகள் பதிவு செய்து 621 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும்.

Top