logo
ஆடி அமாவாசை: ஈரோட்டில் மீன் -இறைச்சி கடைகளில்  மக்கள் கூட்டம் மிகக்குறைவாகவே காணப்பட்டது

ஆடி அமாவாசை: ஈரோட்டில் மீன் -இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் மிகக்குறைவாகவே காணப்பட்டது

08/Aug/2021 11:55:54

ஈரோடு, ஆக: ஆடி அமாவாசை நாள் என்பதால்  ஈரோட்டில் மீன் -இறைச்சி கடைகளில்  மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே  காணப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகள் அன்றும் மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் குழு மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறது. 

மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி விட்டு  பொதுமக்கள் மீன் வாங்க வரவேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இதைப்போல் மீன் கடைக்காரர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கடை முன்பு கிருமி நாசினி, சனிடைசர் , கை கழுவ  சோப் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனை மீறுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி அமாவாசை என்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி  காணப்பட்டது. குறிப்பாக மீன் மார்க்கெட்டில் ஒரு சிலர் மட்டுமே வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். இதைப்போல் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று மக்கள் கூட்டம் இன்றி  காணப்பட்டது. மீன் வாங்க வந்த பொதுமக்களுக்கு கையில் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

இதுபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் இன்றி  காணப்பட்டது. உயிரோடு மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மாநகராட்சி அலுவலர்கள் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Top