logo
புதுக்கோட்டையில் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டையில் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு: ஆட்சியர் தொடக்கம்

07/Aug/2021 09:12:05

புதுக்கோட்டை, ஆக:   பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மூலம்  புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே நகராட்சியுடன் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (7.8.2021) தொடக்கி வைத்தார்.புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா முன்னிலை  வகித்தார்.

 இதில், ஆட்சியர் மேலும் பேசியதாவது; கொரோனா தடுப்பு விழிப்புணா;வு நிகழ்ச்சிகள்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தற்போது  சத்யபாலன் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணா;வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. 

இக்கலை நிகழ்ச்சிகளில் கொரோனா விழிப்புணா;வு பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், குதிரையாட்டம், மயிலாட்டம் என 10 வகையான  கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெறுகிறது. 

மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கோவிட் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் கவியரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Top