logo
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு விரைவில் கேந்திரியவித்யாலயா பள்ளி: எம்பி- திருநாவுக்கரசர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு விரைவில் கேந்திரியவித்யாலயா பள்ளி: எம்பி- திருநாவுக்கரசர் தகவல்

04/Aug/2021 03:56:30

புதுக்கோட்டை, ஆக: கேந்திரிய வித்யாலயா பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதால்  அதற்கான இடத்தை  தேர்வு செய்ய ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள் ளது என்றார் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மறைந்த புதுக்கோட்டை நகர காங்கிரஸ் நிர்வாகி பாலசுப்பிரமணியன் படத்திறப்பு விழாவில் பங்கேற்று  அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி மக்களவை உறுப்பினர்  திருநாவுக்கரசர்  கூறியதாவது: இந்திய அரசியலில் நீங்கா இடம் பெற்றவர் கலைஞர் கருணாநிதி இவர் அரசியல் மட்டுமல்லாது திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர். பன்முக திறமை கொண்டவராகத் திகழ்ந்தார்.சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரின் படமும் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், கலைஞரின் படமும்  சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.  அத்துடன் சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் நடைபெற்றது. எதிர்க்கட்சியினர் தலைவர் உயிரோடு இருக்கும்போது அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்தத் தலைவர் மறைந்த பின்னர் அரசியல் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். அந்த வரிசையில் நேற்று நடந்த சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டி ருக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வரப்படவுள்ளது.  அதற்கான இடத்தை தேர்வு செய்ய ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  பிரதமர் மோடியின் படத்தை அரசு அலுவலகங்கள் வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். அரசு விதிமுறையில் அவ்வாறு இருந்தால், அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படத்துடன்  பிரதமரின் படமும் இடம்பெறுவதில் மாற்றுக் கருத்து கிடையாது. 

பொதுமக்களிடம் திமுக அரசிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  வகையில் வரும் பட்ஜெட் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்  எம்பிதிருநாவுக்கரசர். 


                                                   


Top