logo
மருத்துவப்படிப்பில்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க பிரதமர் மோடிதான் காரணம்:   மொடக்குறிச்சி  எம்எல்ஏ சரஸ்வதி

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க பிரதமர் மோடிதான் காரணம்: மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி

02/Aug/2021 08:45:25


ஈரோடு ஆக: மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் மத்திய மோடி அரசு தான் என மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பாஜக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் கூறியதாவது:  கடந்த 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்காமல் கிடப்பில் போட்டது. ஓட்டு வங்கிக்காக அதில் கவனம் செலுத்தவில்லை.  2016 -இல் பாஜக வந்த பிறகு உயர்நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளது. இதேபோல் பெருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற இந்த சட்டம் மத்திய மோடி அரசு மூலம் பெறப்பட்டுள்ளது. சமூகத்தில் அனைத்து சலுகைளும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் மோடி இதுபோன்ற சட்டத்தை பெற்று தந்துள்ளார்.

இச்சட்டங்கள் பிராமணர்களுக்கு செய்யும் சலுகை என்று திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரி கிடைத்துள்ளது. ஆனால் 13 கோடி மக்கள் உள்ள மத்திய பிரதேசத்திற்கு 13 மருத்துவக்கல்லூரி மட்டுமே கிடைத்துள்ளது.  தமிழகத்தின் மேல் அக்கறை உள்ளதால் தான் அனைத்து விதத்திலும் தமிழகம் முன்னேற பாஜக செயல்பட்டு வருகிறது.

தற்போது அறிவித்துள்ள  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீத இட ஓதுக்கீடு உட்பட தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு தங்களுடையது என பொய் பிரசாரம் செய்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் மோடி அரசால் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் வரும் 2025-க்குள் அனைவருக்கும் வீடு கிடைக்கும். இதேபோல் கர்பிணிகளுககு வழங்கப்படும் நிதியுதவி,  செல்வ மகள் சேமிப்பு திட்டம், முதியவர்களுக்கு காப்பீடு, பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. 

இந்தியாவிலேயே மொடக்குறிச்சி தொகுதியில் தான்  காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து குடீநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை  அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது . மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதுபோன்ற மத்திய மோடி அரசின் திட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டதால் தமிழக மக்கள்   இனிமேல்  பாஜக பக்கம் தான் இருப்பார்கள் என்றார்.

Top