logo
புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் முப்பெரும்  விழா

புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா

30/Jul/2021 06:01:36

புதுக்கோட்டை, ஜூலை:புதுக்கோட்டைஊராட்சி ஒன்றியம், வடமலாப்பூரில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்நடைபெற்றது. 


பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: புதுக்கோட்டை வடமலாப்பூரில் உள்ள புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வணிக நட்பமைப்பின் நிதியின் கீழ் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் அன்னவாசல், அரிமளம், குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை மற்றும் திருவரங்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 55 கிராமங்களை சேர்ந்த 1,028 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 

அந்த வகையில்,இந்நிறுவனத்தின் 14 -ஆம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் 8 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் (29.07.2021)  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தால் பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும், இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டத்தின் கீழ் மானிய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பங்குதாரர்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்து, மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பொதுமக்களுக்கும் சத்தான உணவு பொருட்கள் வழங்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. எனவே பொதுமக்கள் தங்களது உடல் நலனை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு .

நிகழ்வின் போது, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சங்கரலெட்சுமி, நபார்டு திட்ட மாவட்ட வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஜி.எஸ்.தனபதி, நிர்வாக இயக்குநர் ஏ. ஆதப்பன் உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர். 


Top