logo
டோக்கியோஒலிம்பிக் போட்டி: மகளிருக்கான, பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றார்

டோக்கியோஒலிம்பிக் போட்டி: மகளிருக்கான, பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றார்

25/Jul/2021 11:14:02

2020-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார்,

2016-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கடுத்து தற்போது பளு தூக்கும் போட்டியில் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்திருக்கிறார். மீராபாய் வென்ற பதக்கத்தின் மூலம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது.

வெள்ளிபதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மீராபாய் சானு தனது அற்புதமான செயல்திறன் காரணமாக பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு ஒளிமயமான தொடக்கம். தனது அபாரமான செயல்திறனால் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மீராபாய் சானுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் சாய்கோம் கிரிடி மீடி. அவரின் கடைசி மகள் மீராபாய் சானு. 

Top