logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 16,950 மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன: 3960 பேருக்கு அடையாள அட்டை விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16,950 மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன: 3960 பேருக்கு அடையாள அட்டை விநியோகம்

23/Jul/2021 07:25:22

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 16,950 மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 3960 பேருக்கு அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் ( UDID-Unique Disability Identity Card)   மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் 3960 பேருக்கு அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக www.swavlambancard.gov.in  இணையத்தளம் உள்ளது.

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கவுட அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கத்திலுட மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, நடைமுறையில் உள்ளது.

மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 அறிவிக்கப்பட்ட கீழ்காணும் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தனித்துவ வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. மேலும் இதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும், விண்ணப்பங்கள் பெற்றும் பரிசீலனைசெய்யப்படுகிறது. 

கண் பார்வையின்மை,குறை பார்வையின்மை, தொழு நோயிலிருந்துகுணமடைந்தோர்,காது கேளாமை, செவிதிறன் குறைபாடு,கை கால் இயக்க குறைபாடு, அறிவுசார் குறைபாடு [மனவளர்ச்சி குன்றியவர்),  மனநோய், புற உலக  சிந்தனையற்றவர்., மூளை முடக்கு வாதபாதிப்பு, தசை சிதைவு நோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு  திசு  பண்முகக்கடினமாதம், பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு, இரத்த அழிவு சோகை ,இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுத குறைபாடு, அரிவாளனு ரத்தசோகை, அமிலவீச்சால் பாதிக்கப்பட்டோர், நடுக்குவாதம் ஆகிய பாதிப்புகளையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை 16,950 மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில்,6954 பேர் விசாரணை செய்யப்பட்டு  அட்டைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3960 பேருக்கு அடையாள அட்டைகள் வரப்பெற்று, அவை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக  வீடுகளுக்கே  நேரில் விநியோகிக்கப்படுகிறது. 

 புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கில வடிவில்  http://pudukkottai.nic.in. Department for the Differently Abled person   இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சத்தியமூர்த்தி ஹவுசிங் யூனிட் பின்புறம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை -622 001. தொலைபேசி : 04322 - 223678.   Email Id: ddawopdk@gmail.com.  தொடர்பு கொள்ளலாம் என்று  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் டி. கதிர்வேலு  தகவல் தெரிவித்தார்.


Top