logo
ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க. வழக்குரைஞர்  பிரிவு ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க. வழக்குரைஞர் பிரிவு ஆலோசனை கூட்டம்

14/Jul/2021 01:53:16

ஈரோடு ஜூலை: ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க.  அலுவலகத்தில், மாநகர மாவட்ட அ.தி.மு.க  வழக்குரைஞர்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், பி.சி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய சசிகலா, அ.தி.மு.க வலுவாக, பொலிவாக இருப்பதால் மீண்டும் தொண்டர்களை சந்திக்க வருவதாகவும், கழகத்தை அபகரிக்க முயல்வதாகவும், நிர்வாகிகளிடம் தொலைபேசியிலும் பேசி வருகிறார். கட்சியை அபகரிக்க முயல்வதற்கு கண்டனம் தெரிவிப்பது.

அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றிக்காக உழைத்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது.

 உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கொரோனா நோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றில், உண்மை காரணத்தை குறிப்பிட வேண்டும். தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மக்களை அலைக்கழிக்கும் தி.மு.க. அரசை கண்டத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபை எதிர் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பது.  ஈரோடு மாநகர மாவட்ட வழக்குரைஞர் பிரிவினர் மீதும், கழகத்தினர் மீதும் பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஸ். மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Top