logo
சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி ஆதரவற்ற 500பேருக்கு உணவு வழங்கல்

சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி ஆதரவற்ற 500பேருக்கு உணவு வழங்கல்

12/Jul/2021 05:43:05


ஈரோடு, ஜூலை: சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஈரோடு விவேகானந்தா அறக்கட்டளையின் சார்பில் விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் ஈரோடு நிர்வாகி  சிவக்குமார் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு அழைப்பாளராக ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகி முத்துக்குமார் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர் 500பேருக்கு உணவு வழங்கினார். இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை கண்டறிந்து அடுத்து என்ன படிக்கலாம் என்ற கவுன்சிலிங் கெய்டு(வழிகாட்டி புத்தகம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் வழக்குரைஞர்ர் பிரகாஷ் கலந்து கொண்டு 100 மாணவ,மாணவிகளுக்கு வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளையின் அலுவலகத்தின் புதிய அலுவலகத்தை கௌரவ தலைவர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

Top