logo
ஈரோட்டில் இறைச்சி -மீன்கடைகளில் அதிகாலை முதலே அலைமோதிய கூட்டம்

ஈரோட்டில் இறைச்சி -மீன்கடைகளில் அதிகாலை முதலே அலைமோதிய கூட்டம்

11/Jul/2021 05:43:10

ஈரோடு, ஜூலை:  ஈரோட்டில் இறைச்சி -மீன்கடைகளில் அதிகாலை முதலே அலைமோதிய கூட்டத்தை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக  மாநகராட்சி அலுவலர்கள் கண்காணித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கிய பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இறைச்சி ,மீன்   தனிக் கடைகளுக்கு மட்டும் முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மீன் மார்க்கெட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். 

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை (11.7.2021) மீன் கடை, இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரிமாகக் காணப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை, ரங்கம்பாளையம் கொல்லம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வட்டத்தில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர். மீன் கடைகளில் ரோகு, கட்லா, ரூபா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் அதிக அளவில் இன்று  விற்பனையானது.

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாநகராட்சி அலுவலர்கள் மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும்  ஆங்காங்கே மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்தனர்.

Top