logo
 கொரோனாவால் பெற்றோரை இழந்த 98 குழந்தைகள் மனுக்களில் 2 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது

கொரோனாவால் பெற்றோரை இழந்த 98 குழந்தைகள் மனுக்களில் 2 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது

11/Jul/2021 12:49:22

ஈரோடு, ஜூலை:முதலமைச்சரின் கொரோனா நிவாரண உதவித்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில்  கொரோனாவால் பெற்றோரை இழந்த 98 குழந்தைகளுக்காக பெறப்பட்ட  மனுக்களில் முதல்கட்டமாத  2 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளில் பரவியது. இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலித்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை பாதிப்பின் வீரியம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் வாலிபர்கள் வயதானவர்கள் என வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியது. 

தமிழகத்தில் கொரோனாவால் ஏராளமான குடும்பங்கள் சிதைந்து போயுள்ளன. மகன், மகள் ,மனைவி, கணவன், தாய், தந்தைகளை ஏராளமான உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனாவால் தாய்யை, தந்தையை அல்லது இருவரையும் இழந்து ஏராளமான குழந்தைகள் தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் இது போன்று பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து எதிர்காலத்தை கருத்தில் குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டு வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியின்கீழ் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை கேட்டு இதுவரை 98 மனுக்கள் வரப்பெற்று உள்ளன. இதில் 3 குழந்தைகளுக்கு தாய், தந்தையர் அரசு பணியில் உள்ளதால் அந்த மனுக்கள் மட்டும் தள்ளுபடி  செய்யப்பட்டது.

6 குழந்தைகள் கொரோனாவால் தாய், தந்தையர் இருவரையும் இழந்தவர்கள். 89 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் யாரோ ஒருவரை இழந்தவர்கள். இவர்களுடைய மனுக்கள்  வரப்பட்டுள்ளது.

இவற்றில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கு முதற்கட்டமாக வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் உத்தரவானை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் , ஜவான் பவன், இரண்டாவது தளம் ,பயர் சர்வீஸ் பஸ் நிறுத்தம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top