logo
 ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி வாரச் சந்தை 2 மாதங்களுக்குப் பிறகு இன்று செயல்படத் தொடங்கியது

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி வாரச் சந்தை 2 மாதங்களுக்குப் பிறகு இன்று செயல்படத் தொடங்கியது

08/Jul/2021 11:20:14

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி வாரச் சந்தை 2 மாதங்களுக்குப் பிறகு இன்று செயல்படத் தொடங்கியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வாரச்சந்தையாக புஞ்சைபுளியம்பட்டி சந்தை செயல்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கூடும் சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கேரளா, கர்நாடகம் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்வார்கள். 

இதேபோல் மளிகை காய்கறி உள்பட 400-க்கும் மேற்பட்ட கடைகளும் இங்கு  செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சந்தை மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் புஞ்சைபுலியம்பட்டி வாரச்சந்தை செயல்படத் தொடங்கியது. ஆனால் மாட்டுச் சந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மளிகை காய்கறி கடைகள் மட்டுமே திறந்திருந்தன. 

 முதல் நாள் என்பதால் ஒரு சில மளிகை , காய்கறி கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மக்கள் கூட்டமும் குறைந்த அளவே இருந்தது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் இன்று சந்தை  கூடியது. சந்தைக்கு வரும்  மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வலியுறுத் தப்பட்டு இருந்தனர்.  முன்னதாக  இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்படுவ தால் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சந்தையை சுத்தப்படுத்தினர்.

Top