logo
 ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை12 -இல்  சைக்கிள் பேரணி -ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை12 -இல் சைக்கிள் பேரணி -ஆர்ப்பாட்டம்

06/Jul/2021 09:39:51

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை12-இல்  சைக்கிள் பேரணி -ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயற்குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார்.  எம்.எல்.ஏ-  திருமகன் ஈவெரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராஜரின் 118-வது பிறந்த நாள் விழா வருகிற 15-ஆம் தேதி ஆகும். அன்றைய தினம் ஈரோடு மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிகொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. 

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கடுமையாக உயர்த்திக் கொண்டே செல்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100-ஐ கடந்து விற்பனையாகிறது. டீசல் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்படுகிறது.

அதேபோல் சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஜனவரி மாதத்தில் ரூ.700-க்கு விற்பனையான சிலிண்டர் விலை 6 மாதத்தில் ரூ.150 உயர்ந்து தற்போது ரூ.850 விற்கப்படுகிறது. இதனால் குடும்பத் தலைவிகள் மிகவும் துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கடுமையாக உயர்த்தி உள்ள பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து 8-ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம், 12 -ஆம் தேதி அன்று சைக்கிள் பேரணி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜேஷ், பாபு என்கிற வெங்கடாசலம், பாஸ்கர் ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, எஸ்.சி. எஸ். டி. பிரிவு தலைவர் சின்னசாமி, நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, மண்டல தலைவர் அயூப் அலி, விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், திருச்செல்வம், மாவட்ட பொது செயலாளர் கனகராஜ், வின்சென்ட்.

மாவட்ட செயலாளர்கள் சிவா, டிட்டோ, பாலதண்டாயுதம், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி மற்றும் நிர்வாகிகள் கராத்தே யூசுப், சூர்யா சித்திக், கே.என்.பாஷா, இப்ராஹிம், யூசுப், விஜய கண்ணன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் அம்மன் மாதேஷ் நன்றி கூறினார்.

Top