logo
ஈரோடு மாவட்டம், சோலார் அருகே  ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை 13 பவுன் நகைகள் -வெள்ளி திருட்டு

ஈரோடு மாவட்டம், சோலார் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை 13 பவுன் நகைகள் -வெள்ளி திருட்டு

06/Jul/2021 09:23:52

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாவட்டம், சோலார் அருகே  ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை 13 பவுன் நகைகள் -வெள்ளி திருட்டு சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சோலார் அருகே மணலிகந்தசாமி வீதிப் பகுதியை சேர்ந்தவர் கணபதி ( 66). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதி (53). இவர்களுக்கு அருண் ஆதித்யா (36) என்ற மகன் உள்ளான். கணபதி மனைவி, மகனுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

 இந்தநிலையில்  நேற்று கணபதி தர்மபுரியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க சென்று விட்டார்.ஜோதி காங்கயத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க சென்றுவிட்டார். அருண்ஆதித்யா பள்ளிபாளையத்தில் உள்ள மில்லிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

 இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு  திரும்பி வந்த அருண்ஆதித்யா வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோல் இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம், 13 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள்  திருடி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Top