logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல்.

02/Oct/2020 08:33:28

இதுகுறித்துமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் பயனாக கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150 லிருந்து 100 க்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை விரைவாக கண்டறியும் வகையில் தினசரிபரிசோதனைகளின் சராசரி எண்ணிக்கை 2,000 த்திலிருந்து 2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமான நடமாடும் கோவிட்-19 மாதிரி பரிசோதனை வாகனம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு  மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா தினசரி பரிசோதனைத்  திறன் 2,500  மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நோய் தொற்று உள்ளவர்களை காலதாமதமின்றி கண்டறியும் வகையில் 113 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, தினசரி சராசரியாக 3,000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.12 லட்சம் நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 12,793 நபர்கள் சளி, காய்ச்சலுடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மாதிரி சேகரித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை வரை 1 லட்சம் எண்ணிக்கையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை சிறந்த முறையில் உயர்தர  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை காக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்

 

Top