logo
அதிமுகவில் மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருகிறார்: டிகேஎஸ் இளங்கோவன்

அதிமுகவில் மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருகிறார்: டிகேஎஸ் இளங்கோவன்

05/Jul/2021 12:41:21

புதுக்கோட்டை, ஜூலை: அதிமுகவில் மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருவதாக  திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள கட்சி நிர்வாகி இல்ல இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்தத திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை ஒன்றியம் என்றால் அவர்கள் சிறுமைத்தனம் என்று பதறுகின்றனர்.

ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல், ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்வது பாஜகவை ஆதரவாக செயல்பட்டு அவர் மகனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார், அதிமுகவில் ஏற்கெனவே   இரண்டுதலைமை போட்டி நிலவுகின்ற நிலையில் தற்போது மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருகிறார்.

அதிமுகவில் இரட்டை தலைமை சிக்கல் மீண்டும் தொடர்கிறது, முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை மதிக்காமல் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பதவியின் மீது உள்ள அக்கறை மக்கள் மீதோ கட்சியின் மீது இல்லை என்பதைக் காட்டுகின்றது.

திமுக அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில் பாஜக நீட்தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

 

                                                   

Top