logo
இந்திய  மருத்துவர் தினத்தையொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செவிலியர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து

இந்திய மருத்துவர் தினத்தையொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செவிலியர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து

01/Jul/2021 11:59:36

புதுக்கோட்டை, ஜூலை: இந்திய  மருத்துவர்கள் தினத்தையொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செவிலியர்களுக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா  சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

 புதுக்கோட்டை  நகராட்சிக்குள் பட்ட காமராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவரை சந்தித்து அவரை கௌரவித்து  வாழ்த்துக்களை தெரிவித்தார்.அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தேவைகளை கேட்டறிந்ததுடன், அப்பகுதி சமூக ஆர்வலர்கள்  வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாகவும் எம்எல்ஏ-டாக்டர் வை. முத்துராஜா உறுதியளித்தார்.

Top