logo
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

02/Oct/2020 06:30:45

ஈரோடு, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நேற்று இரவு முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று (அக்.2) காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.73  அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2, 656  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு நேற்றுவரை 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.  வெள்ளிக்கிழமை முதல்  400 கனஅடியாக அதிகரித்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 


Top