logo
வெளிநாடு செல்வோர் 28 நாள்களுக்குப்பின் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

வெளிநாடு செல்வோர் 28 நாள்களுக்குப்பின் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

25/Jun/2021 12:45:09

கரூர், ஜூன்:வெளிநாடு செல்வோர் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தொலைபேசி எண்ணில் அறிந்து கொண்டு 28 நாள்களுக்கு பிறகு  இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர் வெளியிட்ட தகவல்:

கரூர் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப் பட்டு வருகிறது.  இந்த கோவிஷீல்டு தடுப்பூசியானது, முதல் தவணை போட்டுக் கொண்டு பிறகு 84 நாள்கள் கழித்து 2-ஆவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி வழங்க அரசால் அறிவுறுத்தப் பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,  பணி நிமித்தம், உயர்கல்வி பயிலுதல்,  விளையாட்டு போட்டிகளில் கலந்துb காள்ளுதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களில், கோவிஷீல்டு 2-ஆவது தவணை போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட நாளிலிருந்து 28 நாள்களுக்கு பிறகு 2-தவணை கோவிஷீல்டு போட்டுக்கொண்டு வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 எனவே, மேற்காணும் வழிகாட்டுதலின்படி, பணி நிமித்தம், உயர்கல்வி பயிலுதல், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும்  நபர்களில் கோவிஷீல்டு 2-ஆவது தவணை போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் மட்டும்

  பின் வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தடுப்பூசி கையிருப்பில் உள்ளதை உறுதி செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-ஆவது தவணை  தடுப்பூசி செலுத் திக்கொள்ளலாம்.
மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் வெளிநாடு செல்வதற்கான உரிய ஆவணங்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்லும்போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 குளித்தலை  நகர ஆரம்ப சுகாதாரநிலையம்- 04323-222399 / 7338843499 . இனாம் கரூர் நகரஆரம்பசுகாதாரநிலையம்- 7338843539 .  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை-9498747638.



Top