logo
மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட மின்னகம் என்ற சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட மின்னகம் என்ற சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

20/Jun/2021 10:03:16

சென்னை, ஜூன்: மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மிழ்நாட்டில் உள்ள 3.10 கோடி  மின் இணைப்புதாரர்களின் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள் / புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின்  (20.6.2021)  சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள  மின்னகம் -என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் திறந்து வைத்து. பிரத்யேகமான 9498794987 என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜிநாடாளுமன்ற உறுப்பினர்  தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top