logo
நடிகர்திலகம் சிவாஜி பிறந்த நாள் விழா காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நடிகர்திலகம் சிவாஜி பிறந்த நாள் விழா காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

01/Oct/2020 11:50:47

ஈரோடு:நடிகர் சிவாஜி கணேசனின் 92-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சிவாஜி கணேசன் படத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, பொதுச் செயலாளர்கள் கனகராஜ், சச்சிதானந்தம் ,வின்சென்ட், எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் தங்கவேலு, மகிளா  காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி கே.என்.பாட்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஈ.பி.ரவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Top