17/Jun/2021 12:04:14
புதுக்கோட்டை, ஜூன்: பழ ஈக்கள் பழங்கள், காய்கறி பயிர்களைத் தாக்கும் ஓர் முக்கிய பூச்சியாகும். இவை வெப்பம் மற்றும்மித வெப்ப மண்டலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. பழ ஈக்கள் 30 முதல் 10 சதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது
சேத அறிகுறிகள் :
இளம் புழுக்கள் முற்றிய காய்களை துளைத்து உட்சென்று சதைப்பகுதிகளை உண்ணும் புழு துளைத்த பகுதியில்மேல் உள்ள தோலில் பழுப்பு நிறத்திட்டுக்கள் தோன்றும். தாக்கப்பட்ட காய்களில் இருந்து பழுப்பு நிற திரவம் கசியும் பின்பு உருகுலைந்து காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
புழுக்களை அழிக்க கோடை உழவு அவசியம்.பயிரிட்ட நிலத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.காய்களை பேப்பர் கொண்டு மூடி பாதுகாக்கலாம்.மாதம் இருமுறை கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் ஆகிய இயற்கை திரவங்களை தெளிக்கலாம். குடைகளில் கிடைக்கும் இக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் ப.வினோதா யோசனை தெரிவித்துள்ளார்