logo
ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

15/Jun/2021 08:09:29

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கரு வடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கறம்பக்குடி அருகேயுள்ள கரு வடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஜூலை.10-ம் தேதி மத்திய அரசு சர்வதேச ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதைக்கண்டித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசைக்கண்டித்து கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச்செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலருமான மு.மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், திட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாவட்டச்செயலர் எஸ்.சி.சோமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலர் த.செங்கோடன், ஒன்றியச்செயலர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top