logo
நீட் தேர்வு- விடைகள் வெளியீடு

நீட் தேர்வு- விடைகள் வெளியீடு

01/Oct/2020 11:56:53

செப்டம்பர் 13- ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 14.37 லட்சம் பேர் எழுதினர். இந்தத்  தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA) வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான விடைகள் https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx மற்றும் https://www.nta.ac.in/ ஆகிய இரு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று, நீட் தேர்வுக்கான விடைகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Top