logo
கொல்லம்பாளையம் ஓடை தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ- மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கொல்லம்பாளையம் ஓடை தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ- மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

30/Sep/2020 10:53:12

ஈரோடு:பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் ஓடைகள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ஓடை கடந்த 15 ஆண்டுகளாக  தூர்வாரப்படாமல் இருந்தது. எனவே கொல்லம்பாளையம் ஓடையை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து. பகுதிச் செயலாளர் கோவிந்தன் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ- கே.வி. ராமலிங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, மாநகராட்சி சார்பில் தற்போது ரூ. 6 லட்சம் மதிப்பில்  கொல்லம்பாளையம் தாயுமான சுந்தரம் வீதியில் இருந்து கட்டபொம்மன் நகர் வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இந்தப் பணியை புதன்கிழமை ஈரோடு மாநகராட்சி ஆணையர்  இளங்கோவன், எம்எல்ஏ-கே.வி. ராமலிங்கம் ஆகியோர் நேரில் சென்று  ஆய்வு செய்தனர்.

இதில், பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ் ,கேசவமூர்த்தி, கோவிந்தராஜ் தங்கமுத்து உட்பட  நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்

Top