logo
வைகை அணையில் இருந்து  பாசனத்துக்கு  தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

04/Jun/2021 06:54:05

மதுரை, ஜூன்: வைகை அணையில் இருந்து  மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணையின் நீர்மட்டம்  67.85 அடியாக இருந்தது. அணைக்கு 648 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி வீதம் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. அமைச்சர்கள் .பெரிய சாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.


நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்கள் கிருஷ்ணன் உண்ணி (தேனி), விஜயலட்சுமி (திண்டுக்கல்), அனீஸ் சேகர் (மதுரை), சட்டப்பேரவை உறுப்பினர்கள்  ராம கிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், வெங்கடேசன் MP, மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், பெரியாறு, வைகை வடி நிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர்கள் சுகுமாறன், பவளக்கண்ணன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்மீர்  45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும் அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்த 120 நாள்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகை அணையில் இருந்து   பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Top