logo
பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா: மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு.

பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா: மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு.

11/Mar/2020 06:08:51

காங்கிரஸ் கட்சியில் இருந்து  விலகிய நிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். இது மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் உடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். மாநிலத்தின் முதல்வர் கமல்நாத்க்கும், மூத்த தலைவரான ஜோதிராதிதிய சிந்தியாவுக்கும் தொடக்கம் முதலே பனிப்போர் நீடித்து வந்தது.  கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை பெருவதில்  இருவருக்கும் இடையே போட்டி நிலவிய நிலையில்,அம்மாநில முதல்வரே தலைவர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் அந்த மாநிலத்தில் கௌரவ ஆசிரியர்களின் கோரிக்கையை நிறையேற்றாவிட்டால் வீதியில் இறங்கி  போராடுவேன் என அறிவித்தார்  ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் மாயமானார்கள் . தொடர்ந்து,  முதல்வர் கமல்நாத் அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இதையடுத்து சிந்தியா ஆதரவு சட்டப்பரேவை உறுப்பினர்கள் 22 பேரும் தங்கள் பதவியை ராஜினமா செய்தனர். அதனைதொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா, புது டெல்லியில் நேற்று (மார்ச்10) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இன்று (மார்ச்11) அதிகாரபூர்வமாக இணைந்தார். தற்போது மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசு கவிழும் நிலையில் உள்ளது. கர்நாடகாவில் பாஜக ஆப்ரேசன் தாமரை எனும் யுக்தியை கொண்டு எப்படி ஆட்சியை கைப்பற்றியதோ அதேபோன்ற யுக்தியை  மத்தியபிரதேசத்திலும் பாஜகவினர்  கையாண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வுகள் மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Top