logo
சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

26/May/2021 07:00:16

புதுக்கோட்டை:ஆலங்குடி பகுதியில்   சூறைக்கற்றால் சேதமடைந்த வாழைகள் குறித்து சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்தன. மேலும், பல்வேறு இடங்களில் பலா மரங்கள், நெற்பயிர்கள் காற்றால் சேதமடைந்தன.

 இந்நிலையில், வடகாடு பகுதியில் சேதமடைந்த வாழைகளை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, 1 வார காலத்திற்குள் சேதங்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

 ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வெ.சரவணன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், வேளாண்மை உதவி இயக்குநர் வினோதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top