logo
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

21/May/2021 08:30:17

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்கை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான நபர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துவங்குவது குறித்து மக்களிடையே கடுமையான எதிர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து தூத்துக்குடி மக்களால் பல நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் போராட்டம் கடுமையான தாக்குதலுக்கு பின்னும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பின்பும் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தினுள் கலந்து கொண்ட பலர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. தற்போது தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்கை தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான நபர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காயங்கள் மற்றும் மனஉளைச் சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம்  நிவாரணம்  வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

Top