logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி தகவல்

19/May/2021 01:24:44

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு இல்லை என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை ஆட்சியர் பி.உமாமகேஸ் வரி முன்னிலையில் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: 

முதல்வரின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கை கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில்  70 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில்  66 கோவிட் நோயாளிகள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இங்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதாக சிகிச்சை பெறும்  நோயாளிகளில்  கூறினர். கோவிட் நோயாளிகளுக்கான மருத்துவம், சத்தா ன உணவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை  அரசின் சார்பில் நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. 

கோவிட் முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால்  அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். எனினும்  தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கையால் கோவிட் நோய் பரவல் கட்டுப்படுத்தப் பட்டு வருவதுடன், மூன்றா வது கோவிட் அலை வந்தாலும் அதனையும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. திரவ ஆக்ஸிஜன் ஒவ்வொரு நாளும் பெறப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. என வே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம். மேலும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கையால் ஏராளமான கோவிட் நோயாளிகளின்  உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 

கோவிட் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருவதுடன், தடுப்பூ சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவிட் தொற்றை கண்டறியும் வகையில் அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் இப்பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக் கு வர வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருவதால் கோவிட் நோய்த் தொற்றை எளிதாக குணப்படுத்த முடியும். 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையினை தலைமை மருத்துவமனையாக உயர்த்த தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அனைத்து நாட்களிலும் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் தொடர்ந்து எடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.


இதைத்தொடர்ந்து அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினையும், அதனை தொடர்ந்து, திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி அருகிலுள்ள, வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையினையும்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர்  அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 


Top