logo
கோடையின் அருமருந்தாகும் ஆரஞ்சு!

கோடையின் அருமருந்தாகும் ஆரஞ்சு!

09/Mar/2020 03:33:24


உலகில் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சிநார்ச் சத்துபி வைட்டமின்கள்வைட்டமின் கால்சியம்பொட்டாசியம் ஆகியவை உள்ளன.


இவைநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதுஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின் சிவைட்டமின் பொட்டாசியம் ஆகியவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடுகோடையில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறதுஇதனால்தான் கோடையின் அருமருந்தாகவும் இப்பழம் திகழ்கிறது.
  அன்றாடம் ஓரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால்உங்கள் பார்வையில் பிரச்சினை முற்றாக தடுத்துவிடலாம்.உலோகங்கள் காற்றுப் பட்டவுடன் துருப்பிடிப்பதைப் போன்றுவயதாக வயதாக உடலின் தோலும் பாதிப்படையும்ஆனால்ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள்வைட்டமின் சி ஆகிய சத்துகள் தோல் சுருங்காமலும்தோல் வியாதிகள் வராமலும் பாதுகாக்கின்றன.இதோடுஇப்பழத்தில் உள்ள ஃபோலேட்; ‘ஃபோலிக்அமிலம் ஆகியவை மூளையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
 மேலும்உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட வைக்கிறது. ஒரு கப் ஆரஞ்சு சாறில் வெறும் 85 கலோரிகள்தான் இருக்கின்றனஊட்டச்சத்து அதிகமாகவும்கலோரிகள் குறைவாகவும் இருக்கும் சிறந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சுஅத்துடன்ஒரு கப் ஆரஞ்சில் 4.3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.


அதனால்இது செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறதுஅத்துடன்இந்தப் பழத்தை சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்கள் வயிறு நிரம்பியிருக்கும்.
  ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைசக்கை உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயத்தின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுஇதய நோய்கள் உருவாகின்றனஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஃபிளேவனாய்ட்; ‘ஹெஸ்பெரிடின்ஆகியவை கொழுப்புச் சத்தைக் குறைத்துரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றனமாரடைப்புமற்ற இதய நோய்கள் வராமல் பாதுகாக்கவும் ஆரஞ்சுப் பழம் உதவுகிறது.உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால்அன்றாடம் ஒரு ஆரஞ்சுப் பழத்தை உட்கொள்வது சிறந்தது. ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதாலும்வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நரம்புக் குறைபாடுகள் ஏற்படுவதை தடுப்பதாலும்தான் கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் பழத்தை உட்கொள்ளலாம் என மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்க காரணமாகிறது.

தொகுப்பு.அருண்குமார்.


Top