logo
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.7-இல் அறிவிக்கப்படும்- கே.பி. முனுசாமி தகவல்

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.7-இல் அறிவிக்கப்படும்- கே.பி. முனுசாமி தகவல்

28/Sep/2020 05:34:27

ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வரும் அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று இணை  ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசிக்கப்பட்டது. அதிமுக செயற்குழுவில்,கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டுத் தெரிவிப்பது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியது, மேக்கே தாட்டூவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் த​மிழர்களை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு நிறைவு பெற்ற நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பது என்று செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அதிமுக ஒருங்கணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் இணைந்து அறிவிப்பார்கள் என்று கூறினார்.

 

Top