logo
 வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு.

வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு.

28/Apr/2021 06:14:21

மே.2-இல்  வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 வேட்பாளர்கள், பணியாளர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர். அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.

முகக்கவசம், கிருமி நாசினி,கையுறை, பேஷ்ஷீல்டு கட்டாயம்.  5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினத்தில்  வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது  போன்ற புதிய கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே உள்ள மின் கம்பங்களில் வழக்கம் போல அங்கு திரண்டு நிற்கும் பொதுமக்கள் தேர்தல் எண்ணிக்கை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, மே 2-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன் றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Top