27/Apr/2021 02:23:33
ஈரோடு, ஏப்:வெண்டிபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து 200 கிலோமீட்டர் செல்லும் கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2.7 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றனர். இந்த கால்வாய் சீரமைப்பு பணிக்காக ரூ.709 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயின்
ஒரு தரப்பினர் அரச்சலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் கோட்டாட்சியர்
அலுவலத்திற்கு பேச்சுவார்த்தைக்கு
அழைக்கப்பட்டனர். அங்கு
கோட்டாட்சியர் சைபுதீன்
தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மே 5 -ஆம் தேதி வரை பணிகள் எதுவும் நடைபெறாது
என அறிவிக்கப்பட்டது.
மேலும் பணிகள் தொடர்பாக திட்ட
அறிக்கையை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் வெண்டி பாளையத்தில் உள்ள பொதுப்பணித் துறை
அலுவலகத்திற்கு திட்ட
அறிக்கை கேட்க சென்றனர். ஆனால் அதிகாரிகள் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று
வெண்டி பாளையத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் பொது
துறை அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
செயற்பொறியாளர் அருள்
விவசாய நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.