logo
வேளாண் மசேதாவைக்க் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் குன்னத்தூரில் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசேதாவைக்க் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் குன்னத்தூரில் ஆர்ப்பாட்டம்

28/Sep/2020 04:15:42

by c.raaj, erode-திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆணைக்கிணங்க, மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் வழிகாட்டுதலோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பகுதிக்கு உட்பட்ட 18 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

   குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் மக்கள் ஜி. ராஜன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் .சுப்பிரமணி  தலைமை வகித்தார். ஊத்துக்குளி வடக்கு வட்டார  காங்கிரஸ்  தலைவர் .சர்வேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய மசோதாவை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடாது, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கொடுமுடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம் பழனிச்சாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், பெருந்துறை தெற்கு வட்டார தலைவர் ராவுத்குமார், பெருந்துறை வடக்கு வட்டார தலைவர் ஆண்ட முத்துசாமி, ஊத்துக்குளி தெற்கு வட்டார தலைவர் பழனிச்சாமி, ஊத்துக்குளி வடக்கு வட்டார தலைவர் சர்வேஸ்வரன் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


Top