logo
கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

04/Apr/2021 09:23:55

கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு.

தமிழக சட்டமன்ற  பொதுத் தோதல் நடைபெறுவதையொட்டி  புதுக்கோட்டை மாவட்டத்தில் 6.4.2021-ஆம் தேதி அன்று கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர்அமலாக்கம் வெ. தங்கராசு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங் கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் களும் (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135(B) ன்படி)  தங்களது தேர்தல் வாக்கினை பதிவு செய்ய  ஏதுவாக 6.4 2021 -ஆம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க  வேண்டும். 

எனவே, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு கூடுதல் முதன்மை  செயலாளர்  நசிமுதின் உத்தரவின் படியும் தொழிலாளர் ஆணையர் ஆ. வள்ளலார் அறிவுரையின்படி  சென்னை தொழிலாளர் ஆணையர் செயல்முறை ஆணை (எண் 1/8135/2021 நாள் 15.03 2021) மற்றும் திருச்சிராப்பள்ளி, கூடுதல் தொழிலாளர் ஆணையரின் குறிப்பாணை (ந.க.எண். 1708/2021, நாள் 24.03.2021) யி்ன்படி  6.4 2021 -ஆம் தேதி அன்று தொழிலாளர் களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கமாறு சம்பந்தப்பட நிறுவனங்களின் நிர்வாகிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.


Top