logo
ஈரோடு மாவட்டத்தில் முதியவர்கள், இணைய நோயால் பாதித்தவர்கள் என  இதுவரை 40,263 பேருக்கு  கொரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் முதியவர்கள், இணைய நோயால் பாதித்தவர்கள் என இதுவரை 40,263 பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறையினர் தகவல்

01/Apr/2021 01:48:03

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் முதியவர்கள், இணைய நோயால் பாதித்தவர்கள் என  இதுவரை 40,263 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக  சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக அரசு ,தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு போடப்பட்டது.  இரண்டாவது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச்1 -ஆம் தேதி முதல் நேற்று வரை ரோடு மாவட்டம் முழுவதும் 40,263 முதியோர்கள், மற்றும் இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளது. 

இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள், இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Top