logo
அதிமுக  வெற்றி பெற்றால் அது மக்கள் விரோத பாஜகவாகத்தான்  செயல்படும் புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுக வெற்றி பெற்றால் அது மக்கள் விரோத பாஜகவாகத்தான் செயல்படும் புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

26/Mar/2021 09:13:46

புதுக்கோட்டை, மார்ச்: அதிமுக  வெற்றி பெற்றால் அது மக்கள் விரோத பாஜகவாகத்தான்  செயல்படும் என்றார் திமுக இளைஞரணி செயலர்  உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜாவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து பேசியதாவது:

நீங்கள் எனக்கு அணிவித்த மாலையை வெற்றி மாலையாக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜாவிற்கு போட்டுள்ளேன். நீங்கள் அனைவரும்  அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். நேற்று முன்தினம் தனியார் டிவி வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 180 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. நாம் 200 இடங்களில் வெற்றி பெறும் வகையில்  தொண்டர்கள் உழைக்க வேண்டும். 

திமுக என்றாலே மோடிக்கு கோபம் வந்துவிடுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றது. ஒரு நாள் இரவில் தூக்கத்தில்  எழுந்து ரூ.500, ரூ.1000  பணத்தாள்கள் செல்லாது என அறிவித்தார். பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த  சொந்த பணத்தை எடுக்க ஏடிஎம்- முன்னே  பல நாள்கள் காத்திருந்து  நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.


 அந்த செல்லாத ஆயிரம் ரூபாய் பணத்தாளைப் போல எடப்பாடி பழனிசாமியை செல்லாக் காசாகக்க வேண்டும். புதிய இந்தியா பிறக்கிறது என்றார் மோடி. புதுசா பிறந்த இந்தியாவை யாரும் பார்த்தீர்களா. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ. 15 ஆயிரம்  கோடி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தரமறுக்கிறது. இதனை கேட்ட பெற வேண்டிய தமிழக அரசு அடிமையாக செயல்படுகிறது. 

8 ஆயிரம் கோடிக்கு மோடி சொந்தமாக பயணம் செய்ய விமானம் வாங்கியிருக்கிறார்.புதிய பராளுமன்றம் கட்ட ஆயிரக்கணக்கான கோடி  செலவு செய்கின்றனர். மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அதிமுக பெருமை பேசியது. அங்கு கட்டியிருந்த கட்டிடத்தை இங்கே எடுத்துவந்துவிட்டேன்(ஒரு செங்கலை தூக்கி கூட்டத்தில் காண்பித்தார்) இந்த ஒரு செங்கலுக்கு ரூ.75 கோடி செலவு செய்துள்ளனர். இந்த கட்டத்தை காணோம்னு தேடிட்டு இருக்காங்க. என் மீது  பாஜக நிர்வாகி புகார் தெரிவித்திருக்கிறார். 


தமிழக  அமைச்சர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டா பெயர் உண்டு. தெர்மாகோல், நூறு ரூபாய், எடுபுடி, குட்கா புகழ் என உண்டு. இவர்கள் பற்றி ஆளுனரிடம் பாமக அன்புமணி ஊழல் புகார் தெரிவித்து பின்னர் அவர்களிடம் வாங்குவதை வாங்கிக் கொண்டு தற்போது கூட்டணி வைத்துள்ளார். தற்போது சிஏஏ, என்ஆர்சி சட்டத்தை எதிர்த்த அதிமுக தற்போது எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறது. 

குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கரை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்:

 தடைசெய்யபட்ட குட்டாகாவை விற்பனை செய்ய மாதவராவிடம் லஞ்சம் பெற்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது  இவர் வீட்டில் இருந்துதான் பல கோடி ரூபாய்  விநியோகம் செய்யப்பட்டது. சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார். 

அதிமுக வெற்றி பெற்றாலும் பிஜேபியாகத்தான் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. முன்பு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தில்லியில்  தமிழகத்தை அடகு வைத்திருந்தார். மீண்டும் வெற்றிபெற்றால் தமிழகத்தை தில்லியிடம் விற்பனை  பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை   வழக்கில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தற்போது, போலீஸ் பெண் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா 80 நாள் மருத்துவமனையில் இருந்தார். இட்லி சாப்பிடுகிறார் என்று தெரிவித்தனர். பின்னர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இவரின் இறப்பிற்கு காரணம் விஜயபாஸ்கர் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக இந்த வழக்கு விசாரனை செய்யப்பட்டு உரியவர்களை உள்ளே தள்ளப்படுவார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமன்னிப்பு கேட்டுள்ளார். இப்படி பட்டவர்களை நாம் வெற்றி பெற வைக்ககூடது. அதனால் நீங்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய   வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து  கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை வேட்பாளர் சின்னத்துரையை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Top