logo
மகளிர் தினத்தையொட்டி  மாமியார் -  மருமகளுக்கான  விநோத போட்டி: வியப்படையச்செய்த  ஈரோட்டிலுள்ள தனியார் உணவகத்தின் நூதன முயற்சி

மகளிர் தினத்தையொட்டி மாமியார் - மருமகளுக்கான விநோத போட்டி: வியப்படையச்செய்த ஈரோட்டிலுள்ள தனியார் உணவகத்தின் நூதன முயற்சி

08/Mar/2021 05:37:42

ஈரோடு, மார்ச்:  உலக மகளிர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மகளிர்கள்  மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள  உணவகம் ஒன்று  வித்தியாசமான முறையில் மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில்  நூதன  அறிவிப்பை வெளியிட்டனர்.

அதாவது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாமியார் - மருமகள் உண்ணும்  உணவுகள் இலவசம். ஆனால்   விரும்பி வாங்கும் உணவை மாமியார்- மருமகள் ஆகிய இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் ஊட்டி விட வேண்டும். அதுவும் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை மாமியார் - மருமகள் இருவரும்  மீதம் வைக்காமல்  ஊட்டிக் கொள்ள  வேண்டும்  என்பதுதான்  அந்த  நிபந்தனை.

இதனையடுத்து பல மாமியார் மருமகள் ஜோடியாக வந்து உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு வெற்றிக்களிப்புடன்வ சென்றனர. ஊர் உலகத்தில் மாமியார் -  மருமகளுக்கு இடையேயான பனிப்போர், நேரடி மோதல் போன்ற சம்பவங்கள் நடப்பதை சகஜமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது, மகளிர் தினத்தன்று நடத்தப்பட்ட  இந்த விநோதமான போட்டியில்  ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி மகிழ்ந்தது  வியப்புக்குரிய தாக அமைந்தது. மேலும்,   மன மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக  போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். 


இதுகுறித்து உணவக நிர்வாகிகள்  கூறுகையில்,  நமது  குடும்ப கலாசாரத்தின்  ஆணி வேராக உள்ள மாமியார்-  மருமகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில்  உணவகத் துக்கு ஒன்றிணைந்து வந்து தங்களுக்கு பிடித்தமான சைவம்,  அசைவ உணவுகளை வாங்கி  இருவரும் அன்புடன் ஒருவர் மாறி ஒருவர் ஊட்டி  மகிழ்ந்தது  குடும்ப உறவுகள் மேம்படுவதற்கு நல்ல அறிகுறியாக தெரிந்தது.

இந்த போட்டியில்   20-க்கு மேற்பட்ட மாமியார் - மருமகள் ஜோடியாகக் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவரும்  வெற்றி பெற்றதாகவும், மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கியதாவும் தெரிவித்தனர். மகளிர் தினத்தை சம்பிரதாய மாகக் கொண்டாடால் வித்யாசமான முயற்சியாக மாமியார் - மருமகள்களுக்கு நூதன முறையில்  போட்டியை நடத்தியது ஈரோடு மாநகர மக்களை  வியப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை.

Top