logo
தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் நடைமுறை அமல்:  வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கட்டாயம்

தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் நடைமுறை அமல்: வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கட்டாயம்

07/Mar/2021 09:24:11


சென்னை: வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா, புதுவை, கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு தமிழகம், கேரளா, உள்பட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எச்சரித்தது. இந்நிலையில் தான் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தால் இ பாஸ் கட்டாயம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆந்திரா, புதுவை, கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

Top