logo
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு  வலியுறுத்தல்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

01/Mar/2021 12:03:39


புதுக்கோட்டை, பிப்: தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் தமிழக அரசு உடனே திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் மெட்ரிக் ஓசை மாத இதழ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து  நடத்தும் கருத்தரங்கம் தலைவர் அசரப் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. செயலாளர்  முத்துக்கருப்பன் அனைவரையும்  வரவேற்றார் கூட்டத்திற்கு சட்டப்  பாதுகாப்பு இயக்குனர் யோகராஜ்  செயல் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்

 கருத்திரங்கிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை சட்டப்  பாதுகாப்பு சங்க தலைவர் மனோகர்ஜெயக்குமார் கலந்துகொண்டு       தேர்வு இல்லாமல் தேர்ச்சியா மாணவர்களின் எதிர்கால நலன் என்ன என்ற தலைப்பில் இன்றைய கல்வி சூழல் குறித்தும்  பேசினார்.

கூட்டத்தில் தீர்மானங்களை தலைவர் அசரப் அன்சாரி வெளியிட சென்னை சட்டப்  பாதுகாப்பு சங்க தலைவர் மனோகர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார் .

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  பிற தீர்மானங்கள்:   இந்த  கல்வி ஆண்டின் 2020-21 ஆர் .டி .இ . 25%  இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும்.    பத்தாம்  மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அவசியம் நடத்த வேண்டும் . 

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும். தனியார் பள்ளியில்  பணிபுரியும் ஆசிரியர்கள் வாகன ஓட்டுனர்கள்  மற்றும் பணியாளர்களுக்கு ஏற்கெனவே கேட்டுக்கொண்ட  தீர்மானத்தின்படி அரசு உடனே நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ல்வேறுமாவட்டநிர்வாகிகள் மற்றும்புதுக்கோட்டை  நிர்வாகிகள் பி. எஸ். கே. கருப்பையா,  சேகர், சக்திவேல் , ஒருங்கிணைப்பாளர் ரமணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார்.

  ஒருங்கிணைப்பாளர் ரமணன் தொகுத்து வழங்கினார். ஏற்பாசுகளைகிருஷ்ணமூர்த்தி, ராஜு தமிழ்மாறன் மற்றும் அற்புத அலெக்சாண்டர்  செய்திருந்தனர். 


Top